articles

பிளவுவாதத் தீ பற்றி எரியும் பிரிட்டன்-கடலூர் சுகுமாரன்​​​​​​​

தி டைம்ஸ் நாளிதழுக்கான கட்டுரையில்  பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயலா பிரா வர் மேன், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட் டங்களை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையின் இரட்டை நிலையை விமர்சித்து எழுதியிருந்தார்.

சுயலா பிரைவர் மேன் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்.  தீவிர வலது சாரி கருத்துக்களுக்காக நன்கு அறியப்பட்டவர். தேசிய வாதத்தை ஆதரித்த போராட்டத்தை அடக்கியது, பாலஸ்தீனர்களுக்கு ஆதர வான போராட்டத்தை மென்மையாக அணுகியது என்றும் அவர் காவல்துறை அதிகாரிகளை விமர்சித்து தான் இந்த கட்டுரையில் எழுதியிருந்தார்.  பிளவு வாதத்தை  பரப்பும் இந்த ஆபத்தான கருத்தை மாற்றிக் கொள்ளுமாறு அவரை பிரதமர் கேட்டுக் கொண்டார். சுயலா தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள மறுத்தார். கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளும் இவருக்கு பலமான எதிர்ப்பு எழுந்தது. வேறு வழி இல்லாமல் சுனக் அவரை பதவி நீக்கம் செய்தார்.

கடந்த ஆண்டு முதலாகவே குடியேற்றவாசிகள்  மற்றும் புலம்பெயர்ந்து வருவோர் குறித்து மிகக் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் உள்நாட்டில் கலாச்சார மோதல் ஏற்படத் துவங்கியது. அவருடைய இந்த கலாச்சார ஆதிக் கத்தின் குரலை பிரதமர்  ஏன் பொறுத்துக் கொண்டார் என்ற கேள்வியும் எழுகிறது. நாடு இரண்டாக பிளவு பட்டு நிற்கும் நிலையை இனி அவர் சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல.  மனித உரிமைகள், மோதல்கள், கலாச்சாரம் பற்றிய பிரிட்டன் நாடாளு மன்ற அணுகுமுறையை, ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போருக்கு அளிக்கும் ஆதரவு என்ற உரைக்கல்லில் உரசிப் பார்க்கும் நிலையும் இதனால் ஏற்பட்டுள்ளது.

மற்றொரு கலாச்சார யுத்தம்!
முதலாம் உலகப் போரின் முடிவில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தொடர்ந்து போரில் இறந்தவர்களை கௌரவிக்கும் நினைவு நாளான நவம்பர் 11 அன்று இஸ்ரேலின் போர்வெறியால் காசாவில் ஏற்பட்ட மனித குல நெருக்கடியை வெளிப்படுத்தும் பேரணியும் நடை பெற்றது. இதனை தடை செய்யாதது ஏன் என அவர்  கேள்வி கேட்பதன் மூலம் தன்னுடைய அரசியல் நிலைபாட்டை  மிகவும் கீழே தாழ்த்திக் கொண்டு விட்டார் சுயலா. இந்த ஆர்ப்பாட்டங்களை வெறுக்கத் தக்கது என நிராகரித்திருந்தார். பிரிட்டிஷ் ராஜ்யத்தின் சுதந்திரத்திற்கு போராடி உயிரிழந்தவர்களை இந்த பேரணி அவமதிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். பிரதம ரும் இது குறித்து மௌனம் காத்தார்.

ஆனால் ஐரோப்பாவின் போர்க்களத்தில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களும் மத்திய கிழக்கு பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக  அரேபியர்களும் ரத்தம் சிந்தி போராடியதன் விளை வாகவே முதலாம் உலகப் போரின் முடிவில் சண்டை  நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த தினத்தில் தான் பிரிட்டிஷ் ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறி பேரணி நடத்தினார்கள். இந்த உண்மையை ஏற்க இருவருமே தயார் இல்லை.

போராட்டக்காரர்கள் என வரும்போது தங்களுக்கு பிடித்தவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மென் மையாக நடக்கிறார்கள் என்று காவல்துறை மீது குற்றம் சாட்டுகிறார் சுயலா. இவர் மூலம் அவர் மற்றொரு கலாச்சார போரை தூண்டுகிறார். பிரிட்டனில் வாழும் இஸ்லாமியர்களின் தேச உணர்வை கேள்விக் குள்ளாக்குகிறார்.

பரோனஸ் சயித்தா வார்சியின் பதிலடி!

தங்களை தேசபக்தர்கள் என சொல்லிக் கொள்ளும் எல்லோருமே உண்மையில் கலவரக்காரர்கள், நாட்டின் கலவரத்தீயை மூட்டுபவர்கள், ஒரு இனத்தின ருக்கு எதிராக மற்றொரு இனத்தினரை கொம்பு சீவி விடுபவர்களும் இவர்களே. மொத்தத்தில் சுயலா ஆபத்தானவர், தேசத்தை பிளவுபடுத்துபவர் என்று கூறி கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பரோடா வாசி பதிலடி கொடுத்தார்.

ரிஷி சுனக்  இந்த தீயை அடக்கியிருக்க வேண்டும். ஆனால் நீண்ட காலமாகவே நெருப்பை எரியவிட்டு  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பலதரப்பட்ட சமூகங்களை கொண்ட பிரிட்டனை ஒன்றிணைத்த பன்முக கலாச்சாரத்திற்கு எதிராக, விழித்தெழச் செய்யும் போராட்டங்களை நடத்தும் இடதுசாரிகளுக்கு எதிராக,புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக, சர்ச்சையை கிளப்பி விட்டு அவர்கள் மீது தாக்கு தலையும் சீற்றத்தையும் உருவாக்கிய சுயலா மீது ஏன் அவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்?

லிஸ் ட்ரஸ் மற்றும்  ரிஷி சுனக்கின் அமைச்சர வைகளில் இவருடைய  இனப்படுகொலை வெறிப் பேச்சு  ஒருவித மனச்சோர்வையும் ஏற்படுத்தியது.இதற்கு எதிராக கண்டனங்கள் எழவில்லை.அவரு டைய உரையாடல்கள் மேலும் வலதுசாரி அரசி யலை நோக்கி நாட்டை நகர்த்தியது.

குடியேற்ற பிரச்சனையில்  சுயலா நிலைபாடு!
லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் இவர் பணியாற்றிய போது ரூவாண்டவிற்கு ஒரு விமானம் புறப்படு கிறது, அதுதான் என் கனவு என ஒரு முறை ஆவேச மாக குறிப்பிட்டார்.

இவருக்கு முன்னால் உள்துறை செயலாளராக பணியாற்றிய ப்ரீத்தி பட்டேலும் இவரும் சேர்ந்து உரு வாக்கிய குடியரசுற்றவாசிகள் திட்டம் இப்படி வரை யறுக்கிறது:

“இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த தாக கருதப்படுபவர்கள் ரூவாண்டாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் பிறகு மீண்டும் இங்கிலாந்தில் தஞ்சம் புக முடியாதவாறு தடுக்கப்படுவார்கள்”

பிரிட்டனின் மனித உரிமை சட்டங்கள் இதை அனுமதிக்காத சூழ்நிலையில் இதுவரை இப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும்  ஒரு விமானம் ரூவாண்டா விற்கு புறப்படுகிறது என அடிக்கடி குறிப்பிடு வார். ஆபத்தான கால்வாயை கடந்து குடியேறும்  மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்கு பதி லாக அதனை எங்கள் தெற்கு கரையில் நடத்தப்படும் படையெடுப்பு என்றும் கொச்சைப்படுத்துவார்.

இந்தியர்களுக்கும் எதிராக!
சுயலாவின்  கருத்துக்கள் எப்போதும் மாறாமலே தான் இருந்தன. குறிப்பாக இந்தியாவிலிருந்து பிரிட்டனில் குடியேறியுள்ள இந்தியர்கள் விசா காலத்திற்குப் பிறகும்  நீண்ட காலம் தங்குவதாக  ஒரு முறை குறிப்பிட்டார். இதன் விளைவாக இந்தியா- பிரிட்டன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தடம் புரண்டன. குடியேற்றவாசிகளை தாக்கி அவர் பேசும் பொழுது தானும் ஒரு புலம்பெயர்ந்தவரின் மகள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார். இருபதாம் நூற்றாண்டில் தனது பெற்றோரை உலகம் முழுவதும் கொண்டு சென்றது மாற்றத்தின் புயல் . ஆனால் இப்பொழுது வரவிருப்பது ஒரு சூறாவளி காற்று என  குடியேற்றவாசிகளை அச்சுறுத்துகிறார்.

மொரிஷியஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலி ருந்து கோவா வழியாக குடியேறியவர்களின் மகளான சுயலா இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் பன்முக கலாச்சாரம் பற்றி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். ஒரு இந்திய வம்சாவளி இந்து மதத்தைச் சார்ந்த பிரதமரின் அமைச்சரவையில் அவர் ஒரு உறுப்பினர். பிரிட்டிஷ் வேர்களில் இருந்து உருவான வெளியுறவுச் செயலாளர். ஒரு சக ஊழியர் அவர்தான்(ஜேம்ஸ் கிளவர்லி) இப்பொழுது புதிதாக உள் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சார்ந்த ஒரு யூதர் இவரு டைய கணவர். தான் பௌத்த மதத்தைச் சார்ந்தவர் என  சொல்லிக் கொள்பவர். ஆனாலும் பன்முக கலாச்சா ரம் தோல்வி அடைந்ததாக குறிப்பிடுகிறார். ஏனெனில் அது பிற மக்களையும் நம் சமூகத்திற்குள் வர வழைத்து நமக்கு இணையாக வாழ அனுமதிக்கிறது என்றும் வெறுப்பை உதிர்க்கிறார் .

தங்களது நாட்டுக்குள் ஒருவர் விரும்பியோ விரும்பாமலோ வருகிறார் என்றால் அவர்  தன்னு டைய அடையாளம்,கலாச்சாரம் , அதன் சாராம்சம்  எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என கட்டளையி டும் பேச்சு அவருடைய  இன வெறியின்  உச்சம்.

அடுத்த முரண்பாடு

தன்னுடைய கருத்துக்காக அல்ல, பிரதமருக்கு கீழ்படிய மறுத்ததற்காக சுயலா பதவியில் இருந்து நீக் கப்பட்டுள்ளார். அரசியல் சதுரங்க ஆட்டத்தில் அடுத்த காய் நகர்வாக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது முரண்பாடு நிறைந்தது. குடியேற்றவாசிகளின் மீது கோபத்தை அதிகமாக்கி பிரெக்ஸிட் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டனை விலக வைத்ததில் முதன்மை பங்காற்றிய டேவிட் கேமரூன், ஏற்கனவே சுயலா பற்றவைத்த பிளவுவாதத்தீயை  எப்படி அணைக்கப் போகிறார்?

பிரிட்டனில் இப்போது நடைபெறும்  குடியேற்றவாசி களுக்கு எதிரான பிரச்சாரமும் ஒன்றும் புதியதல்ல. ஆனாலும் கடந்த ஒரு வருடமாக அவர்களுக்கு எதிராக அந்த வெறுப்புத்தீ எண்ணெய் ஊற்றி வளர்க்கப் பட்டுள்ளது. எளிதில் அது அணைந்து விடாது.

ஆதாரம் : பிரியஞ்சலி மாலிக் 20/11/23 இல் 
தி இந்து வில் எழுதிய  கட்டுரை , 
தமிழில் : கடலூர் சுகுமாரன்